Verse 6990 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkeezhveloor Thirutthaandagam · Verse 9 of 10

திருக்கீழ்வேளூர் – திருத்தாண்டகம் · 6.67.9

மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்புபூண்டானைப் புறங்காட்டி லாட லானைப் போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னைஆண்டானை அறிவரிய சிந்தை யானை அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
Share