Verse 6987 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkeezhveloor Thirutthaandagam · Verse 6 of 10

திருக்கீழ்வேளூர் – திருத்தாண்டகம் · 6.67.6

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை தூமத்தம் வாளரவஞ் சூடி னானைஅழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னைவிழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
Share