Verse 6982 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkeezhveloor Thirutthaandagam · Verse 1 of 10
திருக்கீழ்வேளூர் – திருத்தாண்டகம் · 6.67.1
ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்கதாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச் சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்ததோளானைத் தோளாத முத்தொப் பானைத் தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்தகீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.