Verse 6984 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkeezhveloor Thirutthaandagam · Verse 3 of 10
திருக்கீழ்வேளூர் – திருத்தாண்டகம் · 6.67.3
அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை ஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும்விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்குளைவானை அல்லாதார்க் குளையா தானை உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசுகிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.