Verse 6993 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirumudhugundram Thirutthaandagam · Verse 2 of 10
திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.2
காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக் காபாலி கட்டங்க மேந்தி னானைப்பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப் பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப் பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.