Verse 6997 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirumudhugundram Thirutthaandagam · Verse 6 of 10
திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.6
புகழொளியைப் புரமெரித்த புனிதன் றன்னைப் பொன்பொதிந்த மேனியனைப் புராணன் றன்னைவிழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக்கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக் கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.