Verse 7001 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirumudhugundram Thirutthaandagam · Verse 10 of 10
திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.10
இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி எழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப்புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் றன்னைப் புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னைமகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.