Verse 7006 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruppalliyinmukkoodal Thirutthaandagam · Verse 5 of 10
திருப்பள்ளியின்முக்கூடல் – திருத்தாண்டகம் · 6.69.5
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக் கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலேதடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.