Verse 7010 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruppalliyinmukkoodal Thirutthaandagam · Verse 9 of 10
திருப்பள்ளியின்முக்கூடல் – திருத்தாண்டகம் · 6.69.9
ஊனவனை உடலவனை உயிரா னானை உலகேழு மானானை உம்பர் கோவைவானவனை மதிசூடும் வளவி யானை மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்றகானவனைக் கயிலாய மலையு ளானைக் கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளேபானவனைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.