Verse 7009 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruppalliyinmukkoodal Thirutthaandagam · Verse 8 of 10
திருப்பள்ளியின்முக்கூடல் – திருத்தாண்டகம் · 6.69.8
நற்றவனை நான்மறைக ளாயி னானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந் திருவாரூர்த் திருமூலத் தான மேயகொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக் குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.