Verse 6998 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirumudhugundram Thirutthaandagam · Verse 7 of 10

திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.7

போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப் புலியதளே உடையாகத் திரிவான் றன்னைக்காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங் காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னைமாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர் வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
Share