Verse 6999 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirumudhugundram Thirutthaandagam · Verse 8 of 10
திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.8
துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச் சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப்பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப் பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னைமறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்றதிறலானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.