Verse 7000 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirumudhugundram Thirutthaandagam · Verse 9 of 10

திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.9

பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப் புவலோக மெல்லா முழிதந் தானைமுற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்கற்றூணைக் காளத்தி மலையான் றன்னைக் கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற்செற்றானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
Share