verse 12 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 12 · செங்கீரைப் பருவம்

நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளிநெற்றியிற் றொட்டிட்ட வெண்ணீற்றினொடு புண்டரக் கீற்றுக்கு மேற்றிடவொர்நித்திலச் சுட்டி சாத்தித்தாராட்டு சூழியக் கொண்டையு முடித்துத்தலைப்பணி திருத்தி முத்தின்றண்ணொளி ததும்புங் குதம்பையொடு காதுக்கொர்தமனியக் கொப்பு மிட்டுப்பாராட்டு பாண்டிப் பெருந்தேவி திருமுலைப்பாலமுத மூட்டி யொருநின்பானாறு குமுதங் கனிந்தூறு தேறல்தன்பட்டாடை மடிந னைப்பச்சீராட்டி வைத்துமுத் தாடும் பசுங்கிள்ளைசெங்கீரை யாடி யருளேதென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்விசெங்கீரை யாடி யருளே.
Share