verse 13 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 13 · செங்கீரைப் பருவம்
உண்ணிலா வுவகைப் பெருங்களி துளும்பநின்றுன்றிருத் தாதை நின்னையொருமுறை கரம்பொத்தி வருகென வழைத்திடுமுனோடித் தவழ்ந்து சென்றுதண்ணுலா மழலைப் பசுங்குதலை யமுதினியதாய்வயிறு குளிர வூட்டித்தடமார்ப நிறைகுங் குமச்சே றளைந்துபொற்றாடோ ய் தடக்கை பற்றிப்பண்ணுலா வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும்பணைத்தோ ளெருத்தமேறிப்பாசொளிய மரகதத் திருமேனி பச்சைப்பசுங்கதிர் ததும்ப மணிவாய்த்தெண்ணிலா விரிய நின்றாடும் பசுந்தோகைசெங்கீரை யாடி யருளேதென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்விசெங்கீரை யாடி யருளே.