verse 14 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 14 · செங்கீரைப் பருவம்
சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய வெட்டுச்சுவர்க்கா னிறுத்தி மேருத்தூணொன்று நடுநட்டு வெளிமுகடு மூடியிருசுடர் விளக்கிட்டு முற்றஎற்றுபுன லிற்கழுவு புவனப் பழங்கலமெடுத்தடுக் கிப்பு துக்கூழின்னமுத முஞ்சமைத் தன்னை நீபன்முறையிழைத்திட வழித்த ழித்தோர்முற்றவெளி யிற்றிரியு மத்தப் பெரும்பித்தன்முன்னின்று தொந்தமிடவுமுனியாது வைகலு மெடுத்தடுக் கிப்பெரியமூதண்ட கூடமூடுஞ்சிற்றில்விளை யாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளைசெங்கீரை யாடி யருளேதென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்விசெங்கீரை யாடி யருளே.