verse 84 · Annamalai Satakam · Thiruchitrambala Navalar
அண்ணாமலைச் சதகம் 84 · இதுவுமது
தெரிதரு கழுத்தினிடை யொருசுழி யிருந்திடிற்றெய்வமணி யென்றுபெயராம்திருமகள் விலாசமுண் டாமுகந் தலை நாசிதிகழுமார் பிவைநாலிடம்மருவிய விரண்டுசுழி யுண்டாயின் வெற்றிதருமாறிலாச் சரிமத்தகம்மணியா யிருக்கிலவ் வாசிமே லேறுவோர்வாழ்வுமேன் மேலெய்துவார்விரவு நெற்றியினடுவி லொருசுழி யிருக்கினதுவீறுநிதி மதியுமுண்டாம்வேளிவ் விடங்களிற் சுழியிலா விவுளியின்மேலேற னன்றன்றுகாண்அரியயற் களவிடற் கரியபோ ரழகனேயருள் பெறு வசந்தாரயர்அண்ணாவினிற்றுதிசெ யுண்ணா முலைக்குரியவண்ணா மலைத்தேவனே.