verse 88 · Annamalai Satakam · Thiruchitrambala Navalar

அண்ணாமலைச் சதகம் 88 · இதுவுமது

கொய்யுளைப் புரவியது நிற்கின் மலை யென்னவுங்கூத்தினட மகளென்னவுங்குலவிடும் வாசனையின் மான்மதம் பாளிதங்'குங்கும மகிற்கொப்பதாய்வெய்ய கட் பொறியரா வட்டநெடு வீதிநடைவிடுசுழற் பந்தென்னவும்மேலேறு சேவகன் காற்குள் ளடங்கியேவேகத்தில் வளியென்னவுஞ்செய்யுநற் சாரிகை பதினெட்டு முள்ளதாய்த்திருத்தமிரு நான்குவயதுசென்றபரி மேலேறல் விதியென்று மறையாஞ்செழும்பரியி லேறிவந்தெம்ஐயநீ பாண்டியற் கறிவித்த தென்பர்கா -ணருள்பெறு வசந்தராயர்அண்ணாவினிற்றுதிசெ யுண்ணா முலைக்குரியவண்ணா மலைத்தேவனே.
Share