verse 1757 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Nagar Neengu Padalam · Verse 63 of 235

கம்பராமாயணம் 1757 · நகர் நீங்கு படலம்

'கேட்டே இருந்தேன் எனினும் , கிளர் வான் இன்றே அடையமாட்டேன் ஆகில் அன்றோ , வன் கண் என் கண் ? மைந்தா !காட்டே உறைவாய் நீ , இக் கைகேசியையும் கண்டு இந்நாட்டே உறைவேன் என்றால் , நன்று என் தன்மை ! ' என்றான் .
Share