verse 2770 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Agatthiya Padalam · Verse 49 of 59

கம்பராமாயணம் 2770 · அகத்தியப் படலம்

பொருந்த அமலன் பொழில் அகத்து இனிது புக்கான் ;விருந்து அவண் அமைத்தபின் விரும்பி முனி ,'மேனாள்இருந்தவம் இழைத்த எனது இல்லிடையின் வந்து , என்அருந்தவம் முடித்தனை ; அருட்கு அரச ! 'என்றான் .
Share