verse 8352 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Naagabaasa Padalam · Verse 220 of 300
இராமன் இலக்குவனைக் காணுதல்
கம்பராமாயணம் 8352 · நாகபாசப் படலம்
பிணம் பெருங் குன்றினூடும், குருதி நீர்ப் பெருக்கினூடும்,நிணப்பெருஞ் சேற்றி னூடும், படைக்கல நெருக்கி னூடும்,மணப் பெருங் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்கணத்திலும் பாதிப் போதில் தம்பியைச் சென்று கண்டான்.