verse 8574 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Piramaatthira Padalam · Verse 2 of 231
இந்திரசித்து இராவணன்பால் விரைந்து வருதல்
கம்பராமாயணம் 8574 · பிரமாத்திரப் படலம்
'கூயினன், நுந்தை 'என்றார்; குன்று எனக் குவிந்த தோளான்,'போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும் 'என்றான்;'ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்? 'என்னா,மேயது சொன்னார்; கேட்டான்; தாதைபால் விரைவின் வந்தான்.