verse 96 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 96
கருணைவா ரிதிபொழிந்த கடைக்கண்க ளீராறுங் கரமீ ராறு,மருணமுக மோராறு மீராறு குழைத்திரளு மருளா னந்தத், தருணமலை போன்மயிலுந் தாயரம ரிருபுறனுந் தமியேன் கண்டு, வருணமழை போற்கண்ணீ ரருந்தலென்றோ கதிர்காமம் வாய்ந்த தேவே.