verse 20 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 20 · செங்கீரைப் பருவம்
குருமணி வெயில்விட மரகத நிழல்விரிகுன்றே நின்றூதுங்குழலிசை பழகிய மழைமுகி லெழவெழுகொம்பே வெம்பாசமருவிய பிணிகெட மலைதரு மருமைமருந்தே சந்தானம்வளர்புவ னமுமுணர் வருமரு மறையின்வரம்பே செம்போதிற்கருணையின் முழுகிய கயறிரி பசியகரும்பே வெண்சோதிக்கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர்கன்றே யென்றோதும்திருமகள் கலைகமகடலைமகள் மலைமகள்செங்கோ செங்கீரைதெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில்செங்கோ செங்கீரை.