Verse 6922 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkandraappoor Thirutthaandagam · Verse 2 of 10
திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம் · 6.61.2
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ் செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ் சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.