Verse 6924 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkandraappoor Thirutthaandagam · Verse 4 of 10
திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம் · 6.61.4
இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டுவிலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம் உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.