Verse 8321 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirunoditthaanmalai · Verse 10 of 10
திருநொடித்தான்மலை · 7.100.10
ஊழிதோ றூழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச் சூழிசையின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமிழால்இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரை யாஅஞ்சையப்பர்க் கறிவிப்பதே.
குறிப்பு நொடித்தான்மலையென்பது - கயிலைமலை.