தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கேநானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்துவானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்துஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே.
Open this verse
பாடல்கள் The verses
ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோஊனை உயிர்வெருட் டிஒள்ளி யானை நினைந்திருந்தேன்வானை மதித்தம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்கஆனை அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே.
Open this verse
மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந் தொண்டனெனைஅந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்ததுந்தர மோநெஞ்ச மேநொடித் தான்மலை உத்தமனே.
Open this verse
வாழ்வை உகந்தநெஞ் சேமட வார்தங்கள் வல்வினைப்பட்டாழ முகந்தவென் னைஅது மாற்றி அமரரெல்லாஞ்சூழ அருள்புரிந் துதொண்ட னேன்பரம் அல்லதொருவேழம் அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே.
Open this verse
மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார்பொன்னுல கம்பெறு தல்தொண்ட னேனின்று கண்டொழிந்தேன்விண்ணுல கத்தவர் கள்விரும் பவெள்ளை யானையின்மேல்என்னுடல் காட்டுவித் தான்நொடித் தான்மலை உத்தமனே.
Open this verse
அஞ்சினை ஒன்றிநின் றுஅலர் கொண்டடி சேர்வறியாவஞ்சனை யென்மன மேவைகி வானநன் னாடர்முன்னேதுஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட னேன்பர மல்லதொருவெஞ்சின ஆனைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே.
Open this verse
நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசையமலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரேஅலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்சஉலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே.
Open this verse
அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள்விரவிய வேதஒ லிவிண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்பவரமலி வாணன்வந் துவழி தந்தெனக் கேறுவதோர்சிரமலி யானைதந் தான்நொடித் தான்மலை உத்தமேனே.
Open this verse
இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம்வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்துமந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமன்நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே.
Open this verse
ஊழிதோ றூழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச் சூழிசையின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமிழால்இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரை யாஅஞ்சையப்பர்க் கறிவிப்பதே.
குறிப்பு நொடித்தான்மலையென்பது - கயிலைமலை.
Open this verse