Pathigam 56 / 100 · Seventh Thirumurai · Sundarar

Thiruneedoor

திருநீடூர் · 11 verses · 7865–7875

Share

பாடல்கள் The verses

1 Verse 7865
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்கார தார்கறை மாமிடற் றானைக் கருத லார்புரம் மூன்றெரித் தானைநீரில் வாளை வரால்குதி கொள்ளும் நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்பாரு ளார்பர வித்தொழ நின்ற பரம னைப்பணி யாவிட லாமே.
Open this verse
2 Verse 7866
துன்னு வார்சடைத் தூமதி யானைத் துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்பன்னு நான்மறை பாடவல் லானைப் பார்த்த னுக்கருள் செய்தபி ரானைஎன்னை இன்னருள் எய்துவிப் பானை ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்புன்னை மாதவி போதலர் நீடூர்ப் புனித னைப்பணி யாவிட லாமே.
Open this verse
3 Verse 7867
கொல்லும் மூவிலை வேலுடை யானைக் கொடிய காலனை யுங்குமைத் தானைநல்ல வாநெறி காட்டுவிப் பானை நாளும் நாம்உகக் கின்ற பிரானைஅல்ல லில்லரு ளேபுரி வானை ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக் கூறி நாம்பணி யாவிட லாமே.
Open this verse
4 Verse 7868
தோடு காதிடு தூநெறி யானைத் தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்பாடு மாமறை பாடவல் லானைப் பைம்பொ ழிற்குயில் கூவிட மாடேஆடு மாமயில் அன்னமோ டாட அலைபு னற்கழ னித்திரு நீடூர்வேட னாயபி ரானவன் றன்னை விரும்பி நாம்பணி யாவிட லாமே.
Open this verse
5 Verse 7869
குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற் கூடு மாறத னைக்கொடுப் பானைக்கற்ற கல்வியி லும்மினி யானைக் காணப் பேணும வர்க்கெளி யானைமுற்ற அஞ்சுந் துறந்திருப் பானை மூவ ரின்முத லாயவன் றன்னைச்சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த் தோன்ற லைப்பணி யாவிட லாமே.
Open this verse
6 Verse 7870
காடில் ஆடிய கண்ணுத லானைக் கால னைக்கடிந் திட்டபி ரானைப்பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப் பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்தேடி மாலயன் காண்பரி யானைச் சித்த முந்தெளி வார்க்கெளி யானைக்கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க் கூத்த னைப்பணி யாவிட லாமே.
Open this verse
7 Verse 7871
விட்டி லங்கெரி யார்கையி னானை வீடி லாதவி யன்புக ழானைக்கட்டு வாங்கந் தரித்தபி ரானைக் காதி லார்கன கக்குழை யானைவிட்டி லங்குபுரி நூலுடை யானை வீந்த வர்தலை யோடுகை யானைக்கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க் கண்டு நாம்பணி யாவிட லாமே.
Open this verse
8 Verse 7872
மாய மாய மனங்கெடுப் பானை மனத்து ளேமதி யாய்இருப் பானைக்காய மாயமும் ஆக்குவிப் பானைக் காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானைஓயு மாறுரு நோய்புணர்ப் பானை ஒல்லை வல்வினை கள்கெடுப் பானைவேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர் வேந்த னைப்பணி யாவிட லாமே.
Open this verse
9 Verse 7873
கண்ட முங்கறுத் திட்டபி ரானைக் காணப் பேணும வர்க்கெளி யானைத்தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத் துன்ப முந்துறந் தின்பினி யானைப்பண்டை வல்வினை கள்கெடுப் பானைப் பாக மாமதி யாயவன் றன்னைக்கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க் கேண்மை யாற்பணி யாவிட லாமே.
Open this verse
10 Verse 7874
அல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்கொல்லை வல்லர வம்மசைத் தானைக் கோல மார்கரி யின்னுரி யானைநல்ல வர்க்கணி யானவன் றன்னை நானுங் காதல்செய் கின்றபி ரானைஎல்லி மல்லிகை யேகமழ் நீடூர் ஏத்தி நாம்பணி யாவிட லாமே.
Open this verse
11 Verse 7875
பேரோர் ஆயிர மும்முடை யானைப் பேரி னாற்பெரி தும்மினி யானைநீரூர் வார்சடை நின்மலன் றன்னை நீடூர் நின்றுகந் திட்டபி ரானைஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய் ஆத ரித்தழைத் திட்டவிம் மாலைபாரூ ரும்பர வித்தொழ வல்லார் பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.
Open this verse