Pathigam 86 / 100 · Seventh Thirumurai · Sundarar

Thiruvanpaartthaanpananggaattoor

திருவன்பார்த்தான்பனங்காட்டூர் · 10 verses · 8167–8176

Share

பாடல்கள் The verses

1 Verse 8167
விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானைஅடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணாமடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே.
Open this verse
2 Verse 8168
அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப்பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார்பறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர்உறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே.
Open this verse
3 Verse 8169
தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக்கெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள்பண்ணார்பா டல்அறாத படிறன்றன் பனங்காட்டூர்ப்பெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே.
Open this verse
4 Verse 8170
நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக்குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப்பற்றிப்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ப்பெற்றொன்றே றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே.
Open this verse
5 Verse 8171
உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச்சிரமென்னுங் கலனானைச் செங்கண்மால் விடையானைவரம்முன்ன மருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்பரமன்எங் கள்பிரானைப் பரவாதார் பரவென்னே.
Open this verse
6 Verse 8172
எயிலார்பொக் கம்எரித்த எண்டோள்முக் கண்இறைவன்வெயிலாய்க்காற் றெனவீசி மின்னாய்த்தீ எனநின்றான்மயிலார்சோ லைகள்சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்பயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே.
Open this verse
7 Verse 8173
மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்கையில்மான் மழுவேந்திக் காலன்கா லம்அறுத்தான்பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே.
Open this verse
8 Verse 8174
வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப்பஞ்சிச்சீ றடியாளைப் பாகம்வைத் துகந்தானைமஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர்நெஞ்சத்தெங் கள்பிரானை நினையாதார் நினைவென்னே.
Open this verse
9 Verse 8175
மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம்உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப்பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்றகுழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே.
Open this verse
10 Verse 8176
பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச்சீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்தஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அடிநாய்சொல்ஊரூரன் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே.
Open this verse