வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.
Open this verse
பாடல்கள் The verses
பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவேஅறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறுகிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே.
Open this verse
கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவிநம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலுங்கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச்செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.
Open this verse
உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள்வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர்சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின்கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே.
Open this verse
வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதேநாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகிஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவேகீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே.
Open this verse
தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றேகுளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரிதெளியீருளஞ் சீபர்ப்பதந் தெற்குவடக் காகக்கிளிவாழையொண் கனிகீறியுண் கேதாரமெ னீரே.
Open this verse
பண்ணின்றமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக்கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரியமண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக்கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே.
Open this verse
முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத்துளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிவளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தைக்கிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.
Open this verse
பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற்கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக்கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே.
Open this verse
நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன்தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்தபாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.
Open this verse