Pathigam 94 / 100 · Seventh Thirumurai · Sundarar

Thirucchotrutthurai

திருச்சோற்றுத்துறை · 10 verses · 8249–8258

Share

பாடல்கள் The verses

1 Verse 8249
அழல்நீர் ஒழுகி யனைய சடையும்உழையீ ருரியும் உடையான் இடமாம்கழைநீர் முத்துங் கனகக் குவையுஞ்சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
Open this verse
2 Verse 8250
பண்டை வினைகள் பறிய நின்றஅண்ட முதல்வன் அமலன் இடமாம்இண்டை கொண்டன் பிடைய றாததொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே.
Open this verse
3 Verse 8251
கோல அரவுங் கொக்கின் இறகும்மாலை மதியும் வைத்தான் இடமாம்ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ்சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.
Open this verse
4 Verse 8252
பளிக்குத் தாரை பவள வெற்பிற்குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம்அளிக்கும் ஆத்தி அல்லான் மதுவந்துளிக்குஞ் சோலைச் சோற்றுத் துறையே.
Open this verse
5 Verse 8253
உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்குவதையுஞ் செய்த மைந்தன் இடமாம்திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறுந்துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே.
Open this verse
6 Verse 8254
ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்டபேதைப் பெருமான் பேணும் பதியாம்சீதப் புனலுண் டெரியைக் காலுஞ்சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.
Open this verse
7 Verse 8255
இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்புறங்காட் டாடும் புனிதன் கோயில்சிறந்தார் சுற்றந் திருவென் றின்னதுறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே.
Open this verse
8 Verse 8256
காமன் பொடியாக் கண்ணொன் றிமைத்தஓமக் கடலார் உகந்த இடமாம்தேமென் குழலார் சேக்கை புகைத்ததூமம் விசும்பார் சோற்றுத் துறையே.
Open this verse
9 Verse 8257
இலையால் அன்பால் ஏத்து மவர்க்குநிலையா வாழ்வை நீத்தார் இடமாம்தலையாற் றாழுந் தவத்தோர்க் கென்றுந்தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே.
Open this verse
10 Verse 8258
சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்முற்றா மதிசேர் முதல்வன் பாதத்தற்றார் அடியார் அடிநாய் ஊரன்சொற்றான் இவைகற் றார்துன் பிலரே.
Open this verse