Pathigam 62 / 100 · Seventh Thirumurai · Sundarar

Thirukkolakkaa

திருக்கோலக்கா · 10 verses · 7930–7939

Share

பாடல்கள் The verses

1 Verse 7930
புற்றில் வாளர வார்த்த பிரானைப் பூத நாதனைப் பாதமே தொழுவார்பற்று வான்துணை எனக்கெளி வந்த பாவ நாசனை மேவரி யானைமுற்ற லார்திரி புரமொரு மூன்றும் பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
Open this verse
2 Verse 7931
அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் ஆய நம்பனை வேய்புரை தோளிதங்கு மாதிரு உருவுடை யானைத் தழல்ம திச்சடை மேற்புனைந் தானைவெங்கண் ஆனையின் ஈருரி யானை விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
Open this verse
3 Verse 7932
பாட்ட கத்திசை யாகிநின் றானைப் பத்தர் சித்தம் பரிவினி யானைநாட்ட கத்தேவர் செய்கையு ளானை நட்ட மாடியை நம்பெரு மானைக்காட்ட கத்துறு புலியுரி யானை கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்கோட்ட கப்புன லார்செழுங் கழனிக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
Open this verse
4 Verse 7933
ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை அமரர் நாதனைக் குமரனைப் பயந்தவார்த்த யங்கிய முலைமட மானை வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்ததீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத் தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்கூத்த னைக்குரு மாமணி தன்னைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
Open this verse
5 Verse 7934
அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் ஆள தாகஎன் றாவணங் காட்டிநின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த நித்தி லத்திரள் தொத்தினை முத்திக்கொன்றி னான்றனை உம்பர் பிரானை உயரும் வல்லர ணங்கெடச் சீறுங்குன்ற வில்லியை மெல்லிய லுடனே கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
Open this verse
6 Verse 7935
காற்றுத் தீப்புன லாகிநின் றானைக் கடவு ளைக்கொடு மால்விடை யானைநீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை நிரம்பு பல்கலை யின்பொ ருளாலேபோற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற்கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
Open this verse
7 Verse 7936
அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண் டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத்துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த சோதி யைச்சுடர் போலொளி யானைமின்ற யங்கிய இடைமட மங்கை மேவும் ஈசனை வாசமா முடிமேற்கொன்றை யஞ்சடைக் குழகனை அழகார் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
Open this verse
8 Verse 7937
நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன்தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை யாளனை என்மனக் கருத்தைஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
Open this verse
9 Verse 7938
அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக் கன்றி ரங்கிய வென்றியி னானைப் பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள் பரவி யும்பணி தற்கரி யானைச் சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம் ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக் குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
Open this verse
10 Verse 7939
கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக் கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப்பாட ரங்குடி அடியவர் விரும்பப் பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால் நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்காட ரங்கென நடம்நவின் றான்பாற் கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே.
Open this verse