நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசை செய்ய லுற்றார்கையி லொன்றுங் காண மில்லைக் கழல டிதொழு துய்யி னல்லால்ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்குய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் றளியு ளீரே.
Open this verse
பாடல்கள் The verses
திங்கள் தங்கு சடைக்கண் மேலோர் திரைகள் வந்து புரள வீசுங்கங்கை யாளேல் வாய்தி றவாள் கணப தியேல் வயிறு தாரிஅங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவி யார்கொற் றட்டி யாளால்உங்க ளுக்காட் செய்ய மாட்டோம் ஓண காந்தன் றளியு ளீரே.
Open this verse
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி யுங்கழல் ஏத்து வார்கள்மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி மதியு டையவர் செய்கை செய்யீர்அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆவற் காலத் தடிகேள் உம்மைஒற்றி வைத்திங் குண்ண லாமோ ஓண காந்தன் றளியு ளீரே.
Open this verse
வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்றில்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்பல்லை யுக்கப் படுத லையிற் பகலெ லாம்போய்ப் பலிதி ரிந்திங்கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓண காந்தன் றளியு ளீரே.
Open this verse
கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைப டாமேஆடிப் பாடி அழுது நெக்கங் கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்ஓடிப் போகீர் பற்றுந் தாரீர் ஓண காந்தன் றளியு ளீரே.
Open this verse
வாரி ருங்குழல் வாணெ டுங்கண் மலைம கள்மது விம்மு கொன்றைத்தாரி ருந்தட மார்பு நீங்காத் தைய லாளுல குய்ய வைத்தகாரி ரும்பொழிற் கச்சி மூதூர்க் காமக் கோட்டம் உண்டாக நீர்போய்ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே ஓண காந்தன் றளியு ளீரே.
Open this verse
பொய்ம்மை யாலே போது போக்கிப் புறத்தும் இல்லை அகத்தும் இல்லைமெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர் மேலை நாளொன் றிடவுங் கில்லீர்எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்உம்மை என்றே எம்பெ ருமான் ஓண காந்தன் றளியு ளீரே.
Open this verse
வலையம் வைத்த கூற்ற மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டுச்சிலைய மைத்த சிந்தை யாலே திருவ டிதொழு துய்யி னல்லாற்கலைய மைத்த காமச் செற்றக் குரோத லோப மதம வருடைஉலைய மைத்திங் கொன்ற மாட்டேன் ஓண காந்தன் றளியு ளீரே.
Open this verse
வார மாகித் திருவ டிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னேஆரம் பாம்பு வாழ்வ தாரூர் ஒற்றி யூரேல் உம்ம தன்றுதார மாகக் கங்கை யாளைச் சடையில் வைத்த அடிகேள் உந்தம்ஊருங் காடு உடையுந் தோலே ஓண காந்தன் றளியு ளீரே.
Open this verse
ஓவ ணமேல் எருதொன் றேறும் ஓண காந்தன் றளியு ளார்தாம்ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட வரைது கிலொடு பட்டு வீக்கிக்கோவ ணமேற் கொண்ட வேடங் கோவை யாகவா ரூரன் சொன்னபாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப் பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.
Open this verse