Pathigam 35 / 100 · Seventh Thirumurai · Sundarar

Thiruppurambayam

திருப்புறம்பயம் · 10 verses · 7646–7655

Share

பாடல்கள் The verses

1 Verse 7646
அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி நின்றும்போந்துவந் தின்னம்பர்த்தங்கினோமையும் இன்னதென்றிலர் ஈசனாரெழு நெஞ்சமேகங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள் ஏத்திவானவர் தாந்தொழும்பொங்குமால்விடை யேறிசெல்வப் புறம்பயந்தொழப் போதுமே.
Open this verse
2 Verse 7647
பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாரலர் பெண்டிரும்நெதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும் நினைப்பொழிமட நெஞ்சமேமதியஞ்சேர்சடைக் கங்கையானிடம் மகிழும்மல்லிகை செண்பகம்புதியபூமலர்ந் தெல்லிநாறும் புறம்பயந்தொழப் போதுமே.
Open this verse
3 Verse 7648
புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீயுரை யாற்றளர்ந்தறம்புரிந்து நினைப்பதாண்மை அரிதுகாண்இஃ தறிதியேல்திறம்பியாதெழு நெஞ்சமேசிறு காலைநாமுறு வாணியம்புறம்பயத்துறை பூதநாதன் புறம்பயந்தொழப் போதுமே.
Open this verse
4 Verse 7649
குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்செற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மையேவருந் திண்ணமேமற்றொருவரைப் பற்றிலேன்மற வாதெழுமட நெஞ்சமேபுற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந்தொழப் போதுமே.
Open this verse
5 Verse 7650
கள்ளிநீசெய்த தீமையுள்ளன பாவமும்பறை யும்படிதெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண் சேவுடைச்சிவ லோகனூர்துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல் தோன்றுதாமரைப் பூக்கள்மேல்புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயந்தொழப் போதுமே.
Open this verse
6 Verse 7651
படையெலாம்பக டாரஆளிலும் பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்கடையெலாம்பிணைத் தேரைவால்கவ லாதெழுமட நெஞ்சமேமடையெலாங்கழு நீர்மலர்ந்து மருங்கெலாங்கரும் பாடத்தேன்புடையெலாம்மணம் நாறுசோலைப் புறம்பயந்தொழப் போதுமே.
Open this verse
7 Verse 7652
முன்னைச்செய்வினை இம்மையில்வந்து மூடுமாதலின் முன்னமேஎன்னைநீதியக் காதெழுமட நெஞ்சமேயெந்தை தந்தையூர்அன்னச்சேவலோ டூடிப்பேடைகள் கூடிச்சேரு மணிபொழிற்புன்னைக்கன்னி கழிக்கணாறும் புறம்பயந்தொழப் போதுமே.
Open this verse
8 Verse 7653
மலமெலாமறும் இம்மையேமறு மைக்கும்வல்வினை சார்கிலாசலமெலாமொழி நெஞ்சமேயெங்கள் சங்கரன்வந்து தங்குமூர்கலமெலாங்கடல் மண்டுகாவிரி நங்கையாடிய கங்கைநீர்புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும் புறம்பயந்தொழப் போதுமே.
Open this verse
9 Verse 7654
பண்டரியன செய்ததீமையும் பாவமும்பறை யும்படிகண்டரியன கேட்டியேற்கவ லாதெழுமட நெஞ்சமேதொண்டரியன பாடித்துள்ளிநின் றாடிவானவர்தாந் தொழும்புண்டரீக மலரும்பொய்கை புறம்பயந்தொழப் போதுமே.
Open this verse
10 Verse 7655
துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந் துயக்கறாத மயக்கிவைஅஞ்சிஊரன் திருப்புறம்பயத் தப்பனைத்தமிழ்ச் சீரினால்நெஞ்சினாலே புறம்பயந்தொழு துய்துமென்று நினைத்தனவஞ்சியாதுரை செய்யவல்லவர் வல்லவானுல காள்வரே.
Open this verse