Pathigam 70 / 100 · Seventh Thirumurai · Sundarar

Thiruvaavadudhurai

திருவாவடுதுறை · 10 verses · 8004–8013

Share

பாடல்கள் The verses

1 Verse 8004
கங்கை வார்சடை யாய்கண நாதா கால காலனே காமனுக் கனலேபொங்கு மாகடல் விடமிடற் றானே பூத நாதனே புண்ணியா புனிதாசெங்கண் மால்விடை யாய்தெளி தேனே தீர்த்த னேதிரு வாவடு துறையுள்அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
Open this verse
2 Verse 8005
மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை வலிய வந்தெனை ஆண்டுகொண் டானேகண்ணி லேன்உடம் பில்லடு நோயாற் கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன்தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே தேவ னேதிரு வாவடு துறையுள்அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
Open this verse
3 Verse 8006
ஒப்பி லாமுலை யாளொரு பாகா உத்த மாமத்த மார்தரு சடையாய்முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே மூவ ருக்கருள் செய்யவல் லானேசெப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ் செல்வ னேதிரு வாவடு துறையுள்அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
Open this verse
4 Verse 8007
கொதியி னால்வரு காளிதன் கோபங் குறைய ஆடிய கூத்துடை யானேமதியி லேன்உடம் பில்லடு நோயால் மயங்கி னேன்மணி யேமண வாளாவிதியி னாலிமை யோர்தொழு தேத்தும் விகிர்த னேதிரு வாவடு துறையுள்அதிப னேயெனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
Open this verse
5 Verse 8008
வந்த வாளரக் கன்வலி தொலைத்து வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலேவெந்த வெண்பொடி பூசவல் லானே வேட னாய்விச யற்கருள் புரிந்தஇந்து சேகர னேஇமை யோர்சீர் ஈச னேதிரு வாவடு துறையுள்அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
Open this verse
6 Verse 8009
குறைவி லாநிறை வேகுணக் குன்றே கூத்த னேகுழைக் காதுடை யானேஉறவி லேன்உனை அன்றிமற் றடியேன் ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டேசிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் செம்பொ னேதிரு வாவடு துறையுள்அறவ னேயெனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
Open this verse
7 Verse 8010
வெய்ய மாகரி ஈருரி யானே வேங்கை ஆடையி னாய்விதி முதலேமெய்ய னேஅடல் ஆழியன் றரிதான் வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தாசெய்ய மேனிய னேதிகழ் ஒளியே செங்க ணாதிரு வாவடு துறையுள்ஐய னேயெனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
Open this verse
8 Verse 8011
கோதி லாவமு தேஅருள் பெருகு கோல மேஇமை யோர்தொழு கோவேபாதி மாதொரு கூறுடை யானே பசுப தீபர மாபர மேட்டீதீதி லாமலை யேதிரு வருள்சேர் சேவ காதிரு வாவடு துறையுள்ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
Open this verse
9 Verse 8012
வான நாடனே வழித்துணை மருந்தே மாசி லாமணி யேமறைப் பொருளேஏன மாவெயி றாமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்புடை யானேதேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே தேவ னேதிரு வாவடு துறையுள்ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
Open this verse
10 Verse 8013
வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவிமுன் முடித்தஇண்டை மாமலர்ச் செஞ்சடை யானை ஈச னைத்திரு வாவடு துறையுள்அண்ட வாணனைச் சிங்கடி யப்பன் அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்ததண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள் சாத லும்பிறப் பும்மறுப் பாரே.
Open this verse