Pathigam 31 / 100 · Seventh Thirumurai · Sundarar

Thiruidaiyaatrutthogai

திருஇடையாற்றுத்தொகை · 10 verses · 7605–7614

Share

பாடல்கள் The verses

1 Verse 7605
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலிஎந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
Open this verse
2 Verse 7606
சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர்ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர்எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.
Open this verse
3 Verse 7607
கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம்விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்யபடங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதிஇடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே.
Open this verse
4 Verse 7608
கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம்பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலைஇச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
Open this verse
5 Verse 7609
நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்தபிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர்மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்தஇறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.
Open this verse
6 Verse 7610
திங்களூர் திருவா திரையான் பட்டினமூர்நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்லஎங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.
Open this verse
7 Verse 7611
கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன்தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடிஇருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.
Open this verse
8 Verse 7612
தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்பாசனூர் பரமேட்டி பவித்திர பாவநாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்தஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே.
Open this verse
9 Verse 7613
பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர்தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர்கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல்ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே.
Open this verse
10 Verse 7614
ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளேறேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.
Open this verse