எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையேஉற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியேபற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.
Open this verse
பாடல்கள் The verses
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானேபொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடைஇழியாக் குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே.
Open this verse
எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற்கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலைபொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியேஎங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.
Open this verse
உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியேகரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
Open this verse
அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ்சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியேகுரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.
Open this verse
நாத்தா னும்உனைப் பாடலன் றிநவி லாதெனாச்சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியேகூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.
Open this verse
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறஞ்சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபடப்புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியேநந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.
Open this verse
பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக்காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியேகாணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.
Open this verse
நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனேவெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடைஉள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.
Open this verse
நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதியசீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.
Open this verse