Pathigam 47 / 100 · Seventh Thirumurai · Sundarar

Oortthogai

ஊர்த்தொகை · 10 verses · 7773–7782

Share

பாடல்கள் The verses

1 Verse 7773
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறேபாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானேமாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.
Open this verse
2 Verse 7774
கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலாமங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளாசங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே.
Open this verse
3 Verse 7775
நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானேமிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானேமறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானேஇறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.
Open this verse
4 Verse 7776
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானேகாரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானேபேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானேபாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.
Open this verse
5 Verse 7777
மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானேஅருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயேகருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியேபருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே.
Open this verse
6 Verse 7778
தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயேவேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானேநாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானேபாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே.
Open this verse
7 Verse 7779
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானேஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானேஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே.
Open this verse
8 Verse 7780
துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலாபருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயாஅருத்தித் துன்னை அடைந்தார் வினைக ளகல அருளாயே.
Open this verse
9 Verse 7781
புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூராபொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானேவலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீகலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே.
Open this verse
10 Verse 7782
கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னிமைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடிதம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் றமிழ்மாலைசெம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே.
Open this verse