Pathigam 99 / 100 · Seventh Thirumurai · Sundarar

Thirunaageccharam

திருநாகேச்சரம் · 11 verses · 8301–8311

Share

பாடல்கள் The verses

1 Verse 8301
பிறையணி வாணு தலாள்உமை யாளவள் பேழ்கணிக்கநிறையணி நெஞ்சனுங் கநீல மால்விடம் உண்டதென்னேகுறையணி குல்லைமுல் லைஅளைந் துகுளிர் மாதவிமேற்சிறையணி வண்டுகள் சேர்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
2 Verse 8302
அருந்தவ மாமுனி வர்க்கரு ளாகியோர் ஆலதன்கீழ்இருந்தற மேபுரி தற்கியல் பாகிய தென்னைகொலாங்குருந்தய லேகுர வம்மர வின்னெயி றேற்றரும்பச்செருந்திசெம் பொன்மல ருந்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
3 Verse 8303
பாலன தாருயிர் மேற்பரி யாது பகைத்தெழுந்தகாலனை வீடுவித் துக்கருத் தாக்கிய தென்னைகொலாங்கோல மலர்க்குவ ளைக்கழு நீர்வயல் சூழ்கிடங்கிற்சேலொடு வாளைகள் பாய்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
4 Verse 8304
குன்ற மலைக்கும ரிகொடி யேரிடை யாள்வெருவவென்றி மதகரி யின்னுரி போர்த்தது மென்னைகொலாம்முன்றில் இளங்கமு கின்முது பாளை மதுவளைந்துதென்றல் புகுந்துல வுந்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
5 Verse 8305
அரைவிரி கோவணத் தோடர வார்த்தொரு நான்மறைநூல்உரைபெரு கவ்வுரைத் தன்று உகந்தருள் செய்ததென்னேவரைதரு மாமணி யும்வரைச் சந்தகி லோடுமுந்தித்திரைபொரு தண்பழ னத்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
6 Verse 8306
தங்கிய மாதவத் தின்றழல் வேள்வியி னின்றெழுந்தசிங்கமும் நீள்புலி யுஞ்செழு மால்கரி யோடலறப்பொங்கிய போர்புரிந் துபிளந் தீருரி போர்த்ததென்னேசெங்கயல் பாய்கழ னித்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
7 Verse 8307
நின்றவிம் மாதவத் தையொழிப் பான்சென் றணைந்துமிகப்பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விழித்தலென்னேபங்கய மாமலர் மேன்மது வுண்டுவண் தேன்முரலச்செங்கயல் பாய்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
8 Verse 8308
வரியர நாண தாகமா மேரு வில்லதாகஅரியன முப்புரங் கள்ளவை யாரழ லூட்டலென்னேவிரிதரு மல்லிகை யும்மலர்ச் சண்பக மும்மளைந்துதிரிதரு வண்டுபண் செய்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
9 Verse 8309
அங்கியல் யோகுதன் னையழிப் பான்சென் றணைந்துமிகப்பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விழித்தலென்னேபங்கய மாமலர் மேல்மது வுண்டுபண் வண்டறையச்செங்கயல் நின்றுக ளுந்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
10 Verse 8310
குண்டரைக் கூறையின் றித்திரி யுஞ்சமண் சாக்கியப்பேய்மிண்டரைக் கண்டதன் மைவிர வாகிய தென்னைகொலோதொண்டிரைத் துவணங் கித்தொழில் பூண்டடி யார்பரவுந்தெண்டிரைத் தண்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே.
Open this verse
11 Verse 8311
கொங்கணை வண்டரற் றக்குயி லும்மயி லும்பயிலுந்தெங்கணை பூம்பொழில் சூழ்திரு நாகேச் சரத்தானைவங்கம் மலிகடல் சூழ்வயல் நாவலா ரூரன்சொன்னபங்கமில் பாடல்வல் லாரவர் தம்வினை பற்றறுமே.
Open this verse