தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல் உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்எம்மானை எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
Open this verse
பாடல்கள் The verses
முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவா தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக் குன்றமே ஈசனென் றுன்னையே புகழ்வேன்அன்னேயென் அத்தாவென் றமரரால் அமரப் படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனைஎன்னேயென் எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
Open this verse
விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங்கரும்பேயென் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக் காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கைவரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும் வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தைஇரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
Open this verse
நாற்றானத் தொருவனை நானாய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்காற்றானைத் தீயானைக் கடலானை மலையின் றலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ளஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
Open this verse
சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள் சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவிவாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரிஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
Open this verse
மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான் வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும் தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்றவெம்மான மதகரியின் உரியானை வேத விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனிஎம்மானை எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
Open this verse
வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம் பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத் தெண்டோ ளெம் பெருமானைப் பெண்பாகம் ஒருபாற் செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய் அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ எய்தானை எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
Open this verse
பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற் சேராத சிந்தையான் செக்கர்வான் அந்திஅன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமானின் உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனைஎன்னானை எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
Open this verse
திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச் சிலைவளைவித் தொருகணையாற் றொழில்பூண்ட சிவனைக்கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும் உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல்இருந்தானை எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
Open this verse
என்பினையே கலனாக அணிந்தானை எங்கள் எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன் வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்னஅன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர் பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனைஎன்பொன்னை எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
Open this verse