Pathigam 4 / 100 · Seventh Thirumurai · Sundarar

Thiruanjjaikkalam

திருஅஞ்சைக்களம் · 10 verses · 7327–7336

Share

பாடல்கள் The verses

1 Verse 7327
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னேஅலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னேமலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
Open this verse
2 Verse 7328
பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னேபொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே புகரே றுகந்தேறல் புரிந்த தென்னேமடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரியஅடித்தார் கடலங் கரைமேன் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
Open this verse
3 Verse 7329
சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே சிறியார் பெரியார் மனத்தேற லுற்றால்முந்தித் தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க் கமராசந்தித் தடமால் வரைபோற் றிரைகள் தணியா திடறுங் கடலங் கரைமேல்அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
Open this verse
4 Verse 7330
இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் இணையே ஒத்தியாற்குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
Open this verse
5 Verse 7331
வீடின் பயனென் பிறப்பின் பயனென் விடையே றுவதென் மதயா னைநிற்ககூடும் மலைமங் கைஒருத் தியுடன் சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னேபாடும் புலவர்க் கருளும் பொருளென் நிதியம் பலசெய் தகலச் செலவில்ஆடுங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
Open this verse
6 Verse 7332
இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே இறந்தார் தலையிற் பலிகோட லென்னேபரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே பரமா பரமேட் டிபணித் தருளாய்உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங் கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்டரவக் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
Open this verse
7 Verse 7333
ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான் சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான்நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான் நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்நோக்கும் நிதியம் பலவெத் தனையுங் கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்திஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
Open this verse
8 Verse 7334
வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன் விளங்குங் குழைக்கா துடைவே தியனேஇறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத் தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக்கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங் கடுகப் பிரமன் றலையைந் திலுமொன்றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
Open this verse
9 Verse 7335
பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான் பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான்நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச் சிலைதொட் டவனே உனைநான் மறவேன்வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
Open this verse
10 Verse 7336
எந்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்அந்தண் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனைமந்தம் முழவுங் குழலு மியம்பும் வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்னசந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண் டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே.
Open this verse