Verse 7849 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvotriyoor · Verse 5 of 10

திருவொற்றியூர் · 7.54.5

வழித்த லைப்படு வான்முயல் கின்றேன் உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்சுழித்த லைப்பட்ட நீரது போலச் சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங்கழித்த லைப்பட்ட நாயது போல ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கைஒழித்து நீயரு ளாயின செய்யாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
Share