Verse 7917 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvidaimarudhoor · Verse 9 of 10
திருவிடைமருதூர் · 7.60.9
ஏழை மானுட இன்பினை நோக்கி இளைய வர்வயப் பட்டிருந் தின்னம்வாழை தான்பழுக் கும்நமக் கென்று வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம் போக மும்பொருள் ஒன்றறி யாதஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.