Verse 7957 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirutthinai Nagar · Verse 8 of 10

திருத்தினை நகர் · 7.64.8

பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும் பலருங் கண்டழு தெழவுயிர் உடலைப்பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற் பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்துகருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக் கால காலனைக் கடவுளை விரும்பிச்செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
Share