Pathigam 21 / 99 · Sixth Thirumurai · Thirunavukkarasar

Thiruvaakkoor Thirutthaandagam

திருவாக்கூர் - திருத்தாண்டகம் · 10 verses · 6529–6538

Share

பாடல்கள் The verses

1 Verse 6529
முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங் கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங் கல்லலகு பாணி பயின்றார் போலுங் கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர் குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும் அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse
2 Verse 6530
ஓதிற் றொருநூலு மில்லை போலும் உணரப் படாதொன் றில்லை போலுங்காதிற்குழை யிலங்கப் பெய்தார் போலுங் கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும் விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்ஆதிக் களவாகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse
3 Verse 6531
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும் மணிநீல கண்ட முடையார் போலும்நெய்யார் திரிசூலங் கையார் போலும் நீறேறு தோளெட் டுடையார் போலும்வையார் மழுவாட் படையார் போலும் வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்ஐவா யரவமொன் றார்த்தார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse
4 Verse 6532
வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும் வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும் பூங்கங்கை தோய்ந்த சடையார் போலுங்கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலுங் கட்டங்க மேந்திய கையார் போலும்அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse
5 Verse 6533
ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ இடுவெண் டலைகலனா ஏந்தி நாளும்மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்மாகாச மாயவெண் ணீருந் தீயும் மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்ஆகாச மென்றிவையு மானார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse
6 Verse 6534
மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள் மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்மூதூர் முதுதிரைக ளானார் போலும் முதலு மிறுதியு மில்லார் போலுந்தீதூர நல்வினையாய் நின்றார் போலுந் திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse
7 Verse 6535
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும் மான்றோ லுடையா மகிழ்ந்தார் போலுங்கோலானைக் கோளழலாற் காய்ந்தார் போலுங் குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலுங்காலனைக் காலாற் கடந்தார் போலுங் கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்ஆலானைந் தாட லுகப்பார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse
8 Verse 6536
கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங் காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்உண்ணா அருநஞ்ச முண்டார் போலும் ஊழித்தீ யன்ன ஒளியார் போலும்எண்ணா யிரங்கோடி பேரார் போலும் ஏறேறிச் செல்லு மிறைவர் போலும்அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse
9 Verse 6537
கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்நெடியானுஞ் சதுர்முகனுந் நேட நின்ற நீலநற் கண்டத் திறையார் போலும்படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்அடியார் புகலிடம தானார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse
10 Verse 6538
திரையானுஞ் செந்தா மரைமே லானுந் தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்புரையா னெனப்படுவார் தாமே போலும் போரேறு தாமேறிச் செல்வார் போலுங்கரையா வரைவில்லே நாகம் நாணாக் காலத்தீ யன்ன கனலார் போலும்வரையார் மதிலெய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
Open this verse