கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண் கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளைநீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண் நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse
பாடல்கள் The verses
பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும் பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண் தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்தமருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண் மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்காதிருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse
நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண் நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண் துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண் பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கைஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse
தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத் தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண் வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத் திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse
அடுத்தானை யுரித்தான் காண் …
குறிப்பு இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று.
Open this verseஅழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந் தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்கஇழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse
அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண் கடலில்விட முண்டமரர்க் கமுத மீயஇசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse
முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண் பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னிமுடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண் முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னிஇடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse
வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமு மற்று மாகிப்பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண் பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse
வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண் வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பிவிம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண் விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண் அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்றஎம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse
அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கைசெறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண் திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Open this verse