Verse 7064 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkudandhaikkeezhkkottam Thirutthaandagam · Verse 10 of 11
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம் · 6.75.10
ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கேகூவிஅம ருலகனைத்து முருவிப் போகக் குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.