Verse 7066 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirupputthoor Thirutthaandagam · Verse 1 of 10

திருப்புத்தூர் – திருத்தாண்டகம் · 6.76.1

புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண் போர்விடையின் பாகன்காண் புவன மேழும்விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண் விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேத நான்குந்தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண் டோன்காண் தீர்த்தன்காண் திருமாலோர் பங்கத் தான்காண்திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
Share