Verse 7062 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkudandhaikkeezhkkottam Thirutthaandagam · Verse 8 of 11
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம் · 6.75.8
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார் புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்குமாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார் மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்லதீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.